Your cart is empty.
விபரீத ராஜ யோகம்
கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. … மேலும்
கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்கிறார். இது ஓர் அறைகூவல். ஒரு மரபின் தொடர்ச்சியாகும்போதே அதிலிருந்து வெளியேறியும் கச்சிதமான வடிவத்துக்குள் இயங்கும்போதே அதைக் கலைத்துப்போட்டும், விழுமியங்களைச் சொல்லும் தோரணையிலேயே அவற்றை விமர்சித்தும் இந்த அறைகூவலை வெற்றிகொள்கிறார்.
கல்யாணராமன்
கல்யாணராமன் (பி. 1972) பழந்தமிழிலும் நவீனத்தமிழிலும் பயிற்சியுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ (1998), ‘எப்படி இருக்கிறாய்’ (1999), ‘ஆரஞ்சாயணம்’ (2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தி. ஜானகிராமனின் நாவல்களை ஆராய்ந்து, முனைவர் பட்டம் (2001) பெற்றுள்ளார். ஆத்மாநாம் பற்றிக் ‘கனல் வட்டம்’ (2016) என்ற விமர்சனநூலை எழுதியுள்ளார்.
ISBN : 9788194302728
SIZE : 13.8 X 0.8 X 21.5 cm
WEIGHT : 202.0 grams