Your cart is empty.
நோம் சோம்ஸ்கி
நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம், உளவியல்,
சமூகவியல், மொழியியல், கணினியியல், அரசியல் விஞ்ஞானம் எனப் பல துறைகளில்
பங்களித்தவர். அவர் ஒரு மாமனிதராக உருவான பின்புலம் பற்றி விரிவாக
அறிந்துகொள்ள இந்நூல் உதவும். ஐம்பதுகளில் நடந்த மொழியியல் போர்கள்,
தாமஸ் கூன் என்னும் மொழியியல் அறிஞர் குறிப்பிடும் “சோம்ஸ்கிய மொழியியல்
என்னும் அறிவியல் புரட்சி”, சோம்ஸ்கிய மொழியியல் கோட்பாட்டுக் கருத்தியல்கள்,
விமர்சனங்களை உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் அவருடைய
இலக்கணக் கோட்பாடு முன்மாதிரிகள் ஆகியவை குறித்த அலசலை இந்நூல்
உள்ளடக்கியுள்ளது. தம் சமகாலச் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு சோம்ஸ்கி
ஆற்றும் எதிர்வினைகளைப் பற்றியும் இதில் அறியலாம். மொழியியல் அறிஞர்
என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் சுருக்கிவிட முடியாத சோம்ஸ்கியின் பன்முக
ஆளுமையை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.









