Your cart is empty.
தாவித் தியோப்
பிறப்பு: 1966
பிரான்ஸில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை கறுப்பினத்தவர்; 1960 ஆண்டுக்கு முன் பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகல் (Senegal) நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாய் பிரெஞ்சுக்காரர். இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை செனெகலில் கழித்த தாவித் தியோப் மேற்படிப்புக்காக மீண்டும் பிரான்ஸுக்கு வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். தற்போது பிரான்ஸில், போ (Pau) பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இந்த நாவல் 2018ஆம் ஆண்டு Frère d'ame (ஆத்ம சகோதரன்) என்னும் தலைப்போடு பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. பிரபல மொழிபெயர்ப்பாளர் அன்னா மோஸ்கோவாக்கிஸ் (Anna Moschovakis) என்பவரால் ஆங்கிலத்தில் ‘At Night All Blood Is Black’ (இரவில் எல்லோருடைய இரத்தமும் கறுப்புத்தான்) என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு 2021ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு பெற்றது.