Your cart is empty.
சாரா அபூபக்கர்
பிறப்பு: 1936
சாரா அபூபக்கர் 1936ஆம் ஆண்டு தற்போது கேரளத்திலுள்ள காசர்கோடில் பிறந்தார். மெட்ரிக் வரை படித்த சாரா தற்போது மங்களூரில் வசிக்கிறார். கர்நாடகச் சாகித்திய அகாடமி, ஹம்பியிலுள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றம் ஆகியவற்றின் உறுப்பினரா யிருந்தவர். சந்திரகிரி தீரதல்லி (சந்திரகிரி நதிக்கரையில்), சஹனா, வஜ்ரகளு (வயிரங்கள்) இவை சாராவின் நாவல்கள். சப்பலிகளு (செருப்புகள்), பயண மத்து இதர கதெகளு (பயணம் மற்றும் வேறு கதைகள்) இரண்டும் சிறுகதைத் தொகுதிகள். சந்திரிகிரி தீரதல்லி கர்நாடகச் சாகித்திய அகாடமி விருது பெற்றது. தி.சு. சதாசிவம் இந்நாவலைச் சந்திரகிரி நதிக்கரையில் என்று தமிழாக்கம் செய்து அதற்காக மையச் சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதையும் பெற்றார். மனோமி என்று ஒரு நாவலை மலையாளத்திலிருந்து கன்னடத்திற்குச் சாரா மொழிபெயர்த்திருக்கிறார். அதற்காக மையச் சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதையும் பெற்றுள்ளார். லங்கேஷால் ஊக்குவிக்கப்பட்டவர்.
முகவரி - Sara Aboobacker, Microwave Station Road, Mangalore
575 006. Ph.: 0824 2455292.
