Your cart is empty.
ஏ. கே. செட்டியார்
பிறப்பு: 1911 - 1983
ஏ. கே. செட்டியார் 1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படமாக எடுக்கவேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இரு முறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம் செய்தார். முப்பது ஆண்டுகளில், நூறு காமிராக்காரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படங்களைக் கண்டெடுத்தார். 1940இல் படம் வெளிவந்தது. அவர்தான் ஏ. கே. செட்டியார் (1911 - 1983). தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி. குமரி மலர் ஆசிரியர். தமிழ்ச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தியவர். காந்தி பட உருவாக்கத்தைப் பற்றி ஏ. கே. செட்டியார் எளிய நடையில், சுவையாகவும் சிறுசிறு நிகழ்ச்சிக் குறிப்புகளுமாகவும் எழுதிய கட்டுரைகள் முதன்முதலாக நூலுருவம் பெறுகின்றன. அரிய பல பிற்சேர்க்கைகளோடு இந்நூலைத் தொகுத்துள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி, ஏ. கே. செட்டியாரின் வாழ்வையும் பணியையும் அறிமுகப்படுத்தும் ஒரு முன்னுரையினை வழங்கியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அண்ணல் அடிச்சுவட்டில்
1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார மேலும்