Your cart is empty.
அசோகமித்திரன்
பிறப்பு: 1931
இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார் மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப் பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆடிய ஆட்டமென்ன (இ-புத்தகம்)
-எதைப் பற்றி எழுதினாலும் அலாதியான பார்வையுடனும் அடியோட்டமான அங்கதத்துடனும் எழுதியவர் அசோகமித்திரன மேலும்
என் பயணம் (இ-புத்தகம்)
தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப மேலும்
தண்ணீர் (இ-புத்தகம்)
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று மேலும்
திரைக்குப் பின்
-தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே
அவற்றைப் பொரு மேலும்
படைப்புக்கலை
அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும்
சில ஆசிரியர்கள் சில நூல்கள்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்














