Your cart is empty.
சேரன்
பிறப்பு: 1960
சேரன் (பி. 1960) ஈழத்து நவீனக் கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். சேரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இதழ்களில் தொடர்ந்து பத்தி எழுதியுள்ளார். அவருடைய ஆங்கில நாடகங்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. கவிதைகளும் பிற படைப்புகளும் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்வீடிஷ் உட்பட இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘What If the Rain Fails’, ‘Canto of War’, ‘Not By Our Tears’ ஆகிய அவருடைய ஆங்கில நாடகங்களை கனடாவின் Asylum Thetare Group தயாரித்துக் கனடாவிலும் அமெரிக்காவிலும் மேடையேற்றி வருகிறது. சேரன் கவிதைகள் செல்வா கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘You Cannot Turn Away’ (Toronto: TSAR Publishers, 2011) எனவும் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், சாஷா எபெல்லிங் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் ‘In a Time of Burning’ (Todmorden, UK: Arc Publications, 2013) ‘The Second Sunrise’ (Delhi: Navayana, 2012) எனவும் வெளியாகியுள்ளன. பவானி தம்பிராஜாவின் மொழிபெயர்ப்பில் டச்சு மொழியில் Het Verhaal Van de Zee, 2018, Liefsde Kent Geen Sleur (2018) என இரு நூல்கள் வெளியாகியுள்ளன. வங்காள மொழியில், ‘நிர்பச்சிதோ கொபிதா’ என்ற தலைப்பில் சோபிக் டி சர்க்காரின் மொழிபெயர்ப்பில் தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 2017இல் வெளியாகியது. இவர் கனடாவின் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானிடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மின்னஞ்சல் : cheran@uwindsor.ca
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காஞ்சி
-ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’
(2018) மேலும்
நீ இப்பொழுது இறங்கும் ஆறு
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச மேலும்
மீண்டும் கடலுக்கு
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவு மேலும்
திணைமயக்கம் (அல்லது) நெஞ்சொடு கிளர்தல்
சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. மேலும்
அஞர்
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் மேலும்
காடாற்று
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்தி மேலும்