Your cart is empty.
கு. அழகிரிசாமி
பிறப்பு: 1923 - 1970
கு. அழகிரிசாமி (1923-1970) புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். இடைசெவலில் பிறந்தவர். சென்னையிலும் மலேயாவிலும் பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்நேசன் முதலான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. எழுத்துலக அங்கீகரிப்பின் அடையாளமாக சாகித்திய அக்காதெமி விருது இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறுகதைக்காக இப்பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கு,அழகிரிசாமி கட்டுரைகள் முழுத் தொகுப்பு
-. . . ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும் மனிதனாக
வளரவும் முட மேலும்
கு.அழகிரிசாமி சிறுகதைகள்(1942-1969)
-சில சமயம் நான் கண்ட உண்மையைக் கூறுவேன். நான் பெற்ற இன்பத்தை
உணர்த்துவேன். நான் விரும்பும மேலும்
நான் கண்ட எழுத்தாளர்கள்
-புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவ மேலும்
ராஜா வந்திருக்கிறார்
கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நக மேலும்
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாட மேலும்