Your cart is empty.
ஜிம் கார்பெட்
பிறப்பு: 1875 - 1955
ஜிம் கார்பெட் (1875-1955) எட்வர்டு ஜேம்ஸ் (ஜிம்) கார்பெட் இன்றைய உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நைனிடாலில் பிறந்தார். பிரித்தானிய இரயில்வேயில் ஒப்பந்தக்காரராகவும் இரண்டு உலகப் போர்களிலும் பிரித்தானிய இராணுவத்திற்காகவும் பணியாற்றினார். தமது 42ஆம் வயதில் முதன்முறையாக இங்கிலாந்து சென்று திரும்பினார். வேட்டைத் திறமையால் ஆட்கொல்லி வேங்கைகளையும் சிறுத்தைகளையும் கொன்று சாதாரண மக்களின் அன்பைப் பெற்றார். வேட்டைக்காரராகவும் இயற்கையியலாளராகவும் புகைப்படக்காரராகவும் விளங்கினாலும் தம் வேட்டை அனுபவங்கள் சார்ந்து எழுதிய நூல்களே இவருக்கு நீங்காத புகழைத் தந்தன. தம் வாழ்க்கை முழுவதையும் உத்தராஞ்சல் பகுதியிலேயே கழித்த ஜிம் கார்பெட், இந்தியா விடுதலை பெற்ற சில மாதங்களில் பிரிட்டனின் மற்றொரு காலனி நாடான கின்யாவிற்குக் குடிபெயர்ந்து, அங்கேயே காலமானார். ஜிம் கார்பெட்டின் பிற நூல்கள்: The Man-eating Leopard of Rudraprayag (1948); Jungle Lore (1953); My India (1952) Temple Tiger and More Man-eaters (1954); Tree Tops (1955).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எனது இந்தியா (இ-புத்தகம்)
-சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செ மேலும்
குமாயுன் புலிகள் (இ-புத்தகம்)
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன் மேலும்
எனது இந்தியா
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கரு மேலும்
குமாயுன் புலிகள்
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற மேலும்
ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. க மேலும்





