Your cart is empty.
லின்டா ஜெய்வின்
பிறப்பு: ()
லிண்டா ஜெய்வின் (Linda Jaivin) ஆஸ்திரேலிய எழுத்தாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சீனாவின் வரலாறு, பண்பாடு, சமகாலச் சமூகம்
போன்றவை குறித்த எழுத்துகளுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். அமெரிக்காவில் பிறந்த இவர், பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிய வரலாற்றைக் கற்றார். பின்னர் தைவானிலும், ஹாங்காங்கிலும் சீனப் பெருநிலப்பகுதியிலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சீன மொழி, வரலாறு, பண்பாட்டு ஆகிவற்றோடு அவர் கொண்டுள்ள நீண்டகாலத் தொடர்பு, அவரது எழுத்துகளுக்கு ஆழத்தையும் தனித்துவமான பார்வையையும் வழங்கியுள்ளது.
பத்திரிகையாளராகவும் இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர், சீன இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன், சீனாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களான சென் கைகே, ஜாங் யிமௌ ஆகியோரின் திரைப்படங்களுக்கான ஆங்கிலத் துணைத் தலைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்துடனும் தொடர்புடையவர்.
இவரது குறிப்பிடத்தக்க நூலான The Shortest History of China, பல ஆயிரம் ஆண்டுகாலச் சீன நாகரிகத்தின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் அறிமுகப்படுத்துகிறது. பண்டைய சீனச் சிந்தனை மரபுகள், பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், புரட்சிகர மாற்றங்கள், நவீன சீனாவின் உருவாக்கம் எனப் பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களினூடாகச் சீனாவை வடிவமைத்த அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு சக்திகளை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.
சிக்கலான வரலாற்றுச் செய்திகளைக்கூட எளிய, வாசிப்புக்கு உகந்த நடையில் எடுத்துரைப்பதே லிண்டா ஜெய்வினின் எழுத்தின் தனிச்சிறப்பு.
