Your cart is empty.
மோனிகா கொம்பானிகோவா
பிறப்பு: ()
மோனிகா கொம்பானிகோவா
சமகால ஸ்லோவாக்கிய இலக்கிய உலகில் மிக முக்கியமான எழுத்தாளர்களுள்
ஒருவர். பிராட்டிஸ்லேவியாவின் நுண்கலைக் கழகத்தில் ஓவியக் கலை பயின்றவர்.
இவர் இதுவரை எழுதியுள்ள ஒன்பது புத்தகங்களுள் ஐந்து குழந்தைகளுக்கானவை.
நாவல்கள் தவிர இசைப் பாடல்கள், நேர்காணல்கள், செய்தியறிக்கைகளையும்
எழுதியுள்ளார். டெனிக் என் எனும் ஸ்லோவாக்கிய தினசரியில் பதிப்பாளராகவும்
புத்தகத் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். அவரது ‘படகு எண் ஐந்து’ (2010)
எனும் நாவல் 2011ஆம் ஆண்டிற்கான அனாசாஃப்ட் லிட்டெரா விருதைவென்றது.
இதுவரை 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலைத் தழுவி
எடுக்கப்பட்ட ‘லிட்டில் ஹார்பர்’ எனும் திரைப்படம் 2017ஆம் ஆண்டு பெர்லின்
திரைப்பட விழாவில் ‘கிறிஸ்டல் பியர்’ விருதினை வென்றது.

