Your cart is empty.

நாஞ்சில் நாடன்
பிறப்பு: 1947
நாஞ்சில் நாடன் (பி. 1947) நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியம்) குமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ‘தலைகீழ் விகிதங்கள்’ (1977) என்ற தம் முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் பிரபலமானவர். ஆறு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. நாஞ்சில் நாட்டு வாழ்க்கையையும் பெருநகர் வாழ்வின் அவலங்களையும் விவரிக்கும் நாஞ்சில் நாடன் கிராமிய வாழ்வின் மீது புனிதம் ஏதும் ஏற்றவில்லை. இழந்துபோன கிராமியத்தின் நிலைமையையும் தனது ஏக்கங்களையும் அவர் சுதந்திரமாக மறுபரிசீலனை செய்கிறார். இளமைப் பருவத்தைச் சொந்தக் கிராமத்திலும் பதினெட்டு ஆண்டுகள் மும்பையிலும் கழித்த நாஞ்சில் நாடன் தற்போது மனைவி, மகள், மகனுடன் கோவையில் வசிக்கிறார்.