Your cart is empty.
நெஜாத்தி ஒஸ்ஸிரி
பிறப்பு: பி. 1988
நெஜாத்தி ஒஸ்ஸிரி (பி. 1988)
சமகால ஜெர்மன் எழுத்தாளர், நாடகக் கலை ஆலோசகர். தத்துவம், ஜெர்மன்
இலக்கியம், நவீன இலக்கியம் ஆகியவற்றை போஹ்க்கும், இஸ்தான்புல், பெர்லின்
ஆகிய நகரங்களில் பயின்றிருக்கிறார். இவர் பெர்லினில் இயங்கிவரும் புகழ்பெற்ற
மாக்சிம் கார்க்கி நாடகக் குழுவின் நாடகக் கலை ஆலோசகராக 2014 முதல் 2017
வரை பணியாற்றியுள்ளார். இந்நாடகக் குழுவின் ‘ஸ்டுடியோ Я’ என்ற கலை
ஆய்வகத்தின் கலை இயக்குநராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
புகழ்பெற்ற ‘தியேட்டர்டிரெஃப்பென் பெர்லினர் ஃபெஸ்ட்ஸ்பீலே’ என்ற நாடக
விழாவின் சர்வதேச அமைப்பிற்கு 2018 முதல் 2022 வரை தலைமை
வகித்துள்ளார். இவர் நாடக ஆசிரியராக மாக்சிம் கார்க்கி நாடகக் குழு, மான்ஹைம்
தேசிய நாடகக் குழு உள்ளிட்ட பிரபல நாடகக் குழுக்களுக்கு நாடகங்களை
எழுதிவருகிறார். இவரது முதல் நாவலான ‘ஃபாட்டர்மால்’ (Vatermal) 2023ஆம்
ஆண்டிற்கான புத்தக விருதின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வானது. இந்நாவல் ‘ரூர்’
இலக்கிய விருது, ‘ஹோல்டர்லின் ஃபோர்தர்பிரைஸ்’ உள்ளிட்ட விருதுகளை
வென்றுள்ளது. இந்நாவல் மூன்று முறை நாடகமாக அரங்கேறியுள்ளது. இவர்
தற்போது பெர்லின் நகரத்தில் வாழ்ந்துவருகிறார்.

