Your cart is empty.
பிரமிள்
பிறப்பு: (பி. 1939 - 1997)
பிரமிள் (பி. 1939 - 1997)
இயற்பெயர் சிவராமலிங்கம். இலங்கை திருகோணமலையில் பிறந்தார். 1960களின் பிற்பகுதியில் பிரான்சுக்குச் செல்லும் நோக்கத்துடன் இந்தியா வந்தவர் தமிழகத்திலேயே வாழ்ந்தார். ‘எழுத்து’ சிற்றிதழ் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். கவிதைகள், புனைவுகள், கட்டுரைகள் வாயிலாக நவீனத் தமிழின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக முதன்மை பெற்றார். ஓவியம், சிற்பம் ஆகிய நுண்கலைகளிலும் சோதிடத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டிருந்தார். மணமாகாதவர்.
‘கண்ணாடியுள்ளிலுந்து’ (1973), ‘கைப்பிடியளவு கடல்’ (1976), ‘மேல் நோக்கிய பயணம்’ (1980) ஆகியவை பிரமிளின் கவிதை நூல்கள். மூன்று தொகுப்புகளும் பின்னர் கால சுப்ரமணியத்தால் ‘லயம்’ வெளியீடு சார்பாக ஒரே நூலாக ‘பிரமிள் கவிதைகள்’ என்ற பெயரில் அவரது மறைவுக்குப் பின்பு 1998இல் வெளிவந்தது. கதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் தனி நூல்களாக வெளிவந்துள்ளன.
உதரவிதானப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குமேல் சிகிச்சை பெற்றுவந்த பிரமிள், வேலூர் அருகிலுள்ள கரடிக்குடி கிராமத்தில் 6, ஜனவரி 1997 அன்று மறைந்தார்.

நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பிரமிள் தேர்ந்தெடுத்த கதைகள் (இ-புத்தகம்)
₹127.44
எம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக் மேலும்