Your cart is empty.
டி.எம். கிருஷ்ணா
பிறப்பு: 1976
டி.எம். கிருஷ்ணா (பி. 1976)
தொடூர் மாடபூசி கிருஷ்ணா. கர்னாடக இசையுலகில் தனித்த அடையாளம் பெற்ற குரல். மேடைக்கு வெளியிலும் தனித்து ஒலிக்கும் குரல். இசைச் சூழலின் சகல அம்சங்களையும் கூர்மையான கேள்விகளுக்கு உட்படுத்தும் சமூக அக்கறை கொண்ட கலைஞர். இசை, இசைச் சூழல் ஆகியவை குறித்த இவரது ஆழமான தேடலையும் கூர்மையான கேள்விகளையும் கொண்ட ‘சதர்ன் மியூஸிக் - த கர்னாடிக் ஸ்டோரி’ என்னும் நூலும் இவரது கட்டுரைகளும் இசை உலகிலும் அறிவுலகிலும் தொடர்ந்து அதிர்வுகளை எழுப்பிவருகின்றன. ரோமன் மகசஸே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கர்னாடக இசையின் கதை
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆக மேலும்
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறா மேலும்
எம்.எஸ் :காற்றினிலே கரைந்த துயர்
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் மேலும்