திருமாவளவன் (பி. 1955) இலங்கை வடமாகாணம் வருத்தலைவிளான் கிராமத்தில் பிறந்த இவர், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வியை முடித்து ‘லங்காசீமெந்து’ நிறுவனத்தில் கட்டடத் தொழில்நுட்ப மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். இரண்டாவது ஈழப் போரின்போது புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசித்துவருகிறார். கனடாவிலிருந்து வெளிவந்த ‘ழ’கரம் (1996-97) சிற்றிதழின் இணையாசிரியர். இவரது ‘அஃதே இரவு அஃதே பகல்’ கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு, சி. கனகசபாபதி நினைவுப்பரிசு பெற்றது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறந்த கவிதை நூலுக்கான விருதை ‘இருள் - யாழி’ பெற்றது. இவரது பல கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திருமாவளவனின் இதுவரையான கவிதைகளின் தொகைநூல் இது. மின்னஞ்சல்: thiruma23@gmail