Your cart is empty.
ஆர் தாமஸ். டிரவுட்மன்
பிறப்பு: 1940
‘திராவிட உறவுமுறை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய தாமஸ் டிரவுட்மன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல். பாஷம் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் 1968 முதல் 2010 வரை மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய டிரவுட்மன் இப்பொழுது அங்கே தகைசால் பேராசிரியராக விளங்குகிறார். இவருடைய முக்கிய நூல்கள்: Dravidian Kinship (1981); Lewis Henry Morgan and the Invention of Kinship (1987); Aryans and British India (1997); ed., The Aryan Debate (2005); Elephants and Kings (2015). Comparative Studies in Society and History என்ற ஆய்விதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.