Your cart is empty.
வண்ணநிலவன்
பிறப்பு: 1949
வண்ணநிலவன் (பி. 1949) சமகாலத் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர். 1949 டிசம்பர் 15 அன்று திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை உலகநாதன், தாய் ராமலட்சுமி. வண்ணநிலவனின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன். அவரின் மனைவியின் பெயர் சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கண்ணதாசன், கணையாழி, அன்னைநாடு, புதுவை குரல், துக்ளக், சுபமங்களா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், முந்நூறுக்கும் மேல் கட்டுரைகள் என நிறைய எழுதியுள்ளார். ‘கடல் புரத்தில்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருதும், ‘தர்மம்’ சிறுகதைத் தொகுப்புக்காக, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும், புதுடெல்லி ராமகிருஷ்ணா ஜெய் தயாள் மனிதநேய விருது, ‘சாரல்’ இலக்கிய விருது, எஸ்.ஆர்.வி. தமிழ் இலக்கிய விருது, வாலி விருது, விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருது, உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது போன்ற விருதுகளையும் வண்ணநிலவன் பெற்றுள்ளார். ‘கடல்புரத்தில்’ சென்னை தொலைக்காட்சியில் பதிமூன்று வாரத் தொடராக ஒளிபரப்பானது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் மூன்று வசனகர்த்தாக்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எண்ணங்கள் அனுபவங்கள்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகு மேலும்
கருப்புக் கோட்டு
-இள வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வக்கீல் குமாஸ்தாவாக மூன்றாண்டுகள்
பணிபுரிந்த வண்ணநிலவன், நீத மேலும்
பின்னகர்ந்த காலம்
-வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி
காலத்திலிருந்து தொடங்கி, அச மேலும்
இலக்கியமும் இலக்கியவாதிகளும்
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற மேலும்
இரண்டு உலகங்கள்
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க மேலும்
கடல்புரத்தில்
துளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் மேலும்
மறக்க முடியாத மனிதர்கள்
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமி மேலும்