தொ. பத்தினாதனின் ’நாளையும் நாளையே’ சிறுகதைகள்
வாசகப் பரிந்துரை
“சொந்த அனுபவங்களின் துல்லிய விவரிப்பு”
…12 சிறுகதைகளை கொண்ட இத்தொகுதி முதலாவது சிறுகதையைத் தவிர அனைத்தும் அகதிகளின் வாழ்வைப் பற்றியவை. ஒன்றில் அவை இந்தியாவில் அவர்களின் துயரை அல்லது இலங்கைக்கு திரும்பி வந்தபோது அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை பேசுகின்றன…
…வாசிப்பு ஒரு துயர்தோய்ந்த அனுபவமாக இருக்கின்றது. இந்தியாவிலோ இலங்கையிலோ எந்த பிரபலமான ஊடகங்களும் கண்டுகொள்ளாத, இரண்டு நாடுகளையும் சேராத அல்லது அரசுகளோ மக்களோ சேர்த்துக் கொள்ள விரும்பாத ஒரு கூட்டத்தின் வாழ்வியல் படிமங்களாக இக்கதைகள் அமைகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலுமான ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் கதைகளின் நம்பகத்தன்மையையும் துல்லியமான விபரிப்புகளையும் உருவாக்க வழி அமைக்கின்றன…
நன்றி: டெனிசியஸ் கனியூட் அரவிந்தறாஜ் (முகநூலிலிருந்து)