Your cart is empty.
28 Jan 2026
சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்
”பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளின் கதைகள்”
எழுத்தாளர் பா. கண்மணியின் வாசிப்பு அனுபவம்
தொகுப்பைப் படிக்கத் துவங்கியதுமே, க்ராப் சர்ட்டுடன் வலம் வரும் சுஜாதாவுக்குள் இத்தனை தத்ரூபமான கிராமங்களா என வியந்தேன். தமிழில் சிறுவர்கள் அளவிற்கு சிறுமிகள் எழுதப்படவில்லை என்கிற குறையை, தொகுப்பிலிருக்கும் கால்வாசிக் கதைகள் தீர்த்து வைக்கின்றன. இயல்பான வசனங்களும் சரளமான நடையும் எடுத்த புத்தகத்தை வைக்க விடவில்லை…
..ஒரு பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளில் துணிவோடு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள் … …எழுதுங்கள் சுஜாதா. நம் கதையை நாம் தானே அசலாக சொல்லமுடியும். நீங்கள் வளர்ந்த கிராமத்திலிருந்து நகர்ந்து, படித்த சிறு நகரத்தையும் வாழ்ந்து வரும் நகரத்தையும் எழுத முயலுங்கள். எங்கும் துயரங்களுக்கு பஞ்சமில்லை.
நன்றி: பா. கண்மணி (சுஜாதா செல்வராஜின் முகநூல் பதிவிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=26848280738095624&set=a.839200196097034