"வலியில் உதித்த நகைச்சுவையும்... மீண்டு வந்த வாழ்வும்"
…இந்த புத்தகம் என்னென்ன கோணங்களில் எழுதப்பட்டுள்ளது? முதலில் அது கொலைமுயற்சி சம்பவத்தினை விவரிக்கவில்லை. பெரும்பாலும் மூளை அதிக அதிர்ச்சி, வலியினை மறக்கவே விரும்புமாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் அவரால் மட்டுமல்ல நம் அனைவருக்குமே பெரிய விபத்து காயம் நிகழும் சரியான நொடியினை நினைவு கூறுவது சிரமம். ருஷ்டி அதன் பிறகு நடந்தவற்றினை சம்பவங்களின் நிகழ்வுப் பட்டியலாக முதல் அத்தியாயத்தில் விவரித்துவிடுகிறார்…