Your cart is empty.
21 Apr 2026
நாஞ்சில் நாடனின் ’நாஞ்சில் நாட்டு உணவு’ கட்டுரைகள்
நூல் பரிந்துரை
"பிட்சா, பர்கர் தலைமுறையே... 'நெய் மீன்' பத்தியும் 'கரைச்ச புளி' பத்தியும் உங்களுக்குத் தெரியுமா?"
…நாஞ்சில் நாட்டுக்கே என்று பிரத்தியேகமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களையும் உணவு வகைகளையும் சுவையாக விவரித்துள்ளார் நாஞ்சில் நாடன். அவர் எழுதியவற்றில் இன்று பாதிக்கு மேல் இப்போது பழக்கத்தில் இல்லை. இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் வியப்பாகத் தோன்றலாம். அவர்கள் கேள்விப்பட்டேயிராத விஷயங்கள் நிறைய…
…நாஞ்சில் நாட்டில் விளையும் விளைபொருட்களுடன், அங்குள்ள மீன் வகைகள், பாத்திரங்களின் பெயர்கள் சமையல் தொடர்பான கலைச்சொற்கள் எல்லாம் கலந்த பிரம்மாண்ட தொகுப்பு இந்நூல். அதற்கான அவரது கடின உழைப்பும் மெனக்கிடலும் பக்கத்துக்கு பக்கம் தெரிகின்றன…
நாஞ்சில் நாட்டின் உணவு பற்றிய கையேடாகவும், உணவுடன் பின்னிப் பிணைந்த அந்தக் கால மக்களின் வாழ்வியலையும் வரலாற்று ஆவணமாகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.
உணவுப் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு!
நன்றி: கல்பனா ரத்தன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/photo/?fbid=26575492045445885&set=gm.2414275885738723&idorvanity=437996733366658