Your cart is empty.
30 Apr 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
மதிப்புரை
“சொந்த நிலத்தில் போரினால் அடையாளத்தை இழந்தவர்கள், புகலிடத்தில் அதிகாரத்தால் அடையாளத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதை இக்கதைகள் பேசுகின்றன.”
…சிறுகதைகளில் கையாளப்படும் உவமைகளிலும்கூட இந்தக் கையறு நிலையை, அச்சத்தை, அதிகாரத்தின் தோரணையைத் தத்துவமாக மாற்றும் தன்மை சிறப்பாக வெளிப்படுகிறது. ஓரிடத்தில் தாய்ப்பாலுக்காக அழும் குழந்தையிடம் தாயின் அதிகாரம் வெல்கிறது. அவளுடைய அதிகாரத்தால் குழந்தை தாயிடம் வருகிறது என்கிறார். அடுத்த வரியில் குழந்தை வராதபோது தாய்ப்பால் கட்டிவிடுகிறது. அங்கே குழந்தையின் அதிகாரம் வெல்கிறது. தாய் குழந்தையைத் தேடி வருகிறாள். அதிகாரத்தைத் தேடிப் படையெடுக்கும் வாழ்க்கையின் குறுக்குவெட்டு தோற்றமாகவும், அப்படையெடுப்புகளால் அகதிகளாக்கப்படும் மனித வாழ்க்கையின் மீதான பார்வையாகவும் அமைகின்றன இக்கதைகள்…
நன்றி: கிருஷ்ணமூர்த்தி (சீர்மை இணையதளத்திருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://magazine.seermai.com/agathi-vaazhvin-acchangal