Your cart is empty.
11 Mar 2026
"ஒருநாள் வாழ்வெனினும்
பூத்துக்குலுங்கும் மலையாகும் வரம் " கேட்கும் இந்த கவிஞர் ...
"படிக்க படிக்க நீண்டுகொண்டே
எங்கே எப்போது முடியும் என்ற தவிப்புடன்
வாழ்நாள் முழுதும் எதிர்பார்ப்புடனே
அலைய விடும் படித்து முடிக்க இயலாது
புத்தகம் நீ " ♥️என எழுதிய இந்த கவிஞரின் காதல் வரிகள் அத்தனையும் அருமையாக இருப்பினும் இவரின் தேநீர் பற்றிய வரிகள் என்னை தேநீர் பருகிடச்செய்தது ...
"தேநீரும் மையலும்
ஆறிப்போனால்
பெருகுவது
கசப்பு "
....
எதார்த்தங்கள் கவிவடிவம் பெற்றிருக்கின்றன .."அவளும் நானும்" என்ற வரிகள் எனக்கு ஏனோ ஆனந்தத்தை தான் தந்தது !
ஒன்று அல்லது இரண்டு தேநீர் இடைவேளைகளுக்குள் வாசித்துவிட முடியும் அளவான சிறிய புத்தகம் தான் ..💜