நூல்கள்

<p>சஹானாவுடைய உலகம் விசாலமாக இருக்கிறது. பழங்குடி மீன், பூமிச் சிறைச்சாலை, நாடோடிப் பூமிப்பந்து, மலையின் உதிரம்போன்ற குறிஞ்சிப் பூ, நீரோட்டத்திற்கு இசைந்த துடுப்புகள்… இப்படியான படிமங்கள், தோற்றங்கள் காலாகாலமாய் இருந்துவருகின்றன. ஆனால் அவற்றை நாம் கண்டுபிடிக்கவில்லை; எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நகர்ந்திருக்கிறோம். ஒரு பிஞ்சுவிரலுக்குத்தான் இவையெல்லாம் வசப்பட்டுள்ளன. கவிஞரின் கண்களுக்கு இயற்கை தன்னைத் தரிசனப் படுத்தும்போது அந்தக் கவிஞர்கள் அருளாசி பெற்றவர்கள்போல ஆகிவிடுகிறார்கள். </p>
<p>நம் கைவசப்படும் வரிகள் நம்மை ஏய்த்துவிட்டு சஹானாவின் கைகளுக்குப் போய்விட்டதே என்கிற ஏக்கம் எனக்கு! சஹானவுக்கும் தெரியாமலில்லை; நாம் வரிகளைத்தான் எழுதுகிறோம், அவையெல்லாம் பிறர் கண்களுக்குக் கவிதையாகிவிடும் என்று தெரிந்துகொள்கிறார். அவர் மாணவியாக இருந்தபடி, கையில் பிரம்பற்ற ஆசிரியையாக இந்தத் தொகுப்பில் வலசைவருகிறார்</p>

நிதானமாகவும் விரிவாகவும் படிக்க வேண்டிய தொகுப்பு

களந்தை பீர்முகம்மது (முகநூலிலிருந்து)

9 Mar 2026


சஹானாவுடைய உலகம் விசாலமாக இருக்கிறது. பழங்குடி மீன், பூமிச் சிறைச்சாலை, நாடோடிப் பூமிப்பந்து, மலையின் உதிரம்போன்ற குறிஞ்சிப் பூ, நீரோட்டத்திற்கு இசைந்த துடுப்புகள்… இப்படியான படிமங்கள், தோற்றங்கள் காலாகாலமாய் இருந்துவருகின்றன. ஆனால் அவற்றை நாம் கண்டுபிடிக்கவில்லை; எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நகர்ந்திருக்கிறோம். ஒரு பிஞ்சுவிரலுக்குத்தான் இவையெல்லாம் வசப்பட்டுள்ளன. கவிஞரின் கண்களுக்கு இயற்கை தன்னைத் தரிசனப் படுத்தும்போது அந்தக் கவிஞர்கள் அருளாசி பெற்றவர்கள்போல ஆகிவிடுகிறார்கள். 

நம் கைவசப்படும் வரிகள் நம்மை ஏய்த்துவிட்டு சஹானாவின் கைகளுக்குப் போய்விட்டதே என்கிற ஏக்கம் எனக்கு! சஹானவுக்கும் தெரியாமலில்லை; நாம் வரிகளைத்தான் எழுதுகிறோம், அவையெல்லாம் பிறர் கண்களுக்குக் கவிதையாகிவிடும் என்று தெரிந்துகொள்கிறார். அவர் மாணவியாக இருந்தபடி, கையில் பிரம்பற்ற ஆசிரியையாக இந்தத் தொகுப்பில் வலசைவருகிறார்


  • பகிர்: