Your cart is empty.
ரியா என்கிற பூனை என்கிற சூரியன்
-மேலும்
-இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
இதில் உள்ள கவிதைகளைக் குடும்பக் கவிதைகள் என்று சொல்லலாம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் கவிதைகளில் வருகிறார்கள். ஆனால் இவற்றைக் குடும்பக் கவிதைகள் என்று அழைத்துப்பார்ப்பது இதனால் அல்ல. சஹானாவின் குடும்பம் சற்றே பெரிய, சமயங்களில் மிகப்பெரிய குடும்பமாக விரிகிறது. அதில் பூனையும் தெய்வமும் மழையும் மலையும் காற்றும் நிலவும் கடலும் அண்டமும் எனப் பலவும் நிரம்பி நிற்கின்றன. யாவற்றுக்குமிடையே நேயத்தின் பாடலை இசைக்க முயல்கிறார் கவிஞர்.
ISBN : 9789361109423
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 130.0 grams
களந்தை பீர்முகம்மது (முகநூலிலிருந்து)
9 Mar 2026
சஹானாவுடைய உலகம் விசாலமாக இருக்கிறது. பழங்குடி மீன், பூமிச் சிறைச்சாலை, நாடோடிப் பூமிப்பந்து, மலையின் உதிரம்போன்ற குறிஞ்சிப் பூ, நீரோட்டத்திற்கு இசைந்த துடுப்புகள்… இப்படியான படிமங்கள், தோற்றங்கள் காலாகாலமாய் இருந்துவருகின்றன. ஆனால் அவற்றை நாம் கண்டுபிடிக்கவில்லை; எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நகர்ந்திருக்கிறோம். ஒரு பிஞ்சுவிரலுக்குத்தான் இவையெல்லாம் வசப்பட்டுள்ளன. கவிஞரின் கண்களுக்கு இயற்கை தன்னைத் தரிசனப் படுத்தும்போது அந்தக் கவிஞர்கள் அருளாசி பெற்றவர்கள்போல ஆகிவிடுகிறார்கள்.
நம் கைவசப்படும் வரிகள் நம்மை ஏய்த்துவிட்டு சஹானாவின் கைகளுக்குப் போய்விட்டதே என்கிற ஏக்கம் எனக்கு! சஹானவுக்கும் தெரியாமலில்லை; நாம் வரிகளைத்தான் எழுதுகிறோம், அவையெல்லாம் பிறர் கண்களுக்குக் கவிதையாகிவிடும் என்று தெரிந்துகொள்கிறார். அவர் மாணவியாக இருந்தபடி, கையில் பிரம்பற்ற ஆசிரியையாக இந்தத் தொகுப்பில் வலசைவருகிறார்
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ரியா என்கிற பூனை என்கிற சூரியன் (இ-புத்தகம்)
இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் ம மேலும்


