நூல்கள்

<p>நளினி ஜமீலாவின் சொந்த வாழ்க்கையில் அவரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதித்த ஆண்களைப் (அவர்களில் பாலியல் ரீதியாக அவரை அணுகிய வாடிக்கையாளர்களே அதிகம்) பற்றிய குறிப்புகளே இந்த நூல். கேரளப் பண்பாட்டுச் சூழலிலும் சமூக வாழ்விலும் உள்ள பொய்யான ஒழுக்க வாதத்தையும் பண்பாட்டுப் போலித்தனத்தையும் கட்டவிழ்த்துக் காட்டுவதை உபரி விளைவாகக் கொண்டிருக்கிறது இப்பிரதி.</p>
<p>நூலின் மிக முக்கியமான பகுதியாக நான் கருதுவது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பான 'காதலுக்கு வயதில்லை' என்ற பகுதியேயாகும். பிம்பம் (Image) பற்றிய புரிதல், கிரிமினல்களின் உருவாக்கம், தூய்மை/சுத்தம் குறித்த கருத்தியல், வாழும் இடத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுதல், காதல், பெண்ணியம் என்று இந்தப் பகுதியில் அவர் அளித்துள்ள பதில்கள் மிகவும் நுட்பமானதும் அனுபவ முதிர்ச்சி கொண்ட தெளிந்த அரசியல் பார்வையும் உடையதாக உள்ளன</p>

”போலி ஒழுக்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் நளினி ஜமீலா!”

அன்புச் செல்வன் (முகநூலிலிருந்து)

2 Mar 2026


நளினி ஜமீலாவின் சொந்த வாழ்க்கையில் அவரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதித்த ஆண்களைப் (அவர்களில் பாலியல் ரீதியாக அவரை அணுகிய வாடிக்கையாளர்களே அதிகம்) பற்றிய குறிப்புகளே இந்த நூல். கேரளப் பண்பாட்டுச் சூழலிலும் சமூக வாழ்விலும் உள்ள பொய்யான ஒழுக்க வாதத்தையும் பண்பாட்டுப் போலித்தனத்தையும் கட்டவிழ்த்துக் காட்டுவதை உபரி விளைவாகக் கொண்டிருக்கிறது இப்பிரதி.

நூலின் மிக முக்கியமான பகுதியாக நான் கருதுவது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பான 'காதலுக்கு வயதில்லை' என்ற பகுதியேயாகும். பிம்பம் (Image) பற்றிய புரிதல், கிரிமினல்களின் உருவாக்கம், தூய்மை/சுத்தம் குறித்த கருத்தியல், வாழும் இடத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுதல், காதல், பெண்ணியம் என்று இந்தப் பகுதியில் அவர் அளித்துள்ள பதில்கள் மிகவும் நுட்பமானதும் அனுபவ முதிர்ச்சி கொண்ட தெளிந்த அரசியல் பார்வையும் உடையதாக உள்ளன


  • பகிர்: