Your cart is empty.
25 Mar 2026
கொங்கு நிலத்தில் உள்ள வெங்கமேடு என்ற சிற்றூரில் ஒரு சந்தைக்கு வரும் நாகம்மாள் என்ற விதவையைச் சித்தரிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. வெங்கமேட்டிற்கு மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கும் சிவியார் பாளையமே அவளின் கிராமம்.நாகம்மாள் துணிச்சலும் சுதந்திர எண்ணமும் கொண்டவள்; எவருக்கும் எளிதில் அடங்காத குணம் உடையவள்.
கணவன் இறந்த பிறகு, அவள் தம்பி சின்னைய்யன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் வசிக்கிறாள்.சொத்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, நாகம்மாளுக்கும் சின்னைய்யன்–ராமாயி இருவருக்கும் இடையில் மனக்கசப்பு உருவாகிறது.
ஊரில் வம்புகளில் ஈடுபடுபவனான கெட்டியப்பன் உதவியுடன் சொத்துகளைப் பிரித்துக்கொள்ள அவள் நினைக்கிறாள். ஆனால் சூழ்நிலைகள் மோசமடைந்து, ஒரு கடுமையான சண்டையில் மோசமான திருப்பத்துடன் முடிகிறது.