Your cart is empty.
25 Mar 2026
அனுமதியை மீறி பக்கத்து வீட்டிலிருந்து தாவி ஏறி மாடி நிறைய திமிரும் மக்கள் கூட்டமும், ஆறிப்போன பொங்கலைத் தின்றபடி என் வீட்டில் எனக்கே நின்று வேடிக்கைப் பார்க்க இடமில்லையா என்ற பெருமிதம் கலந்த அங்கலாய்ப்பும் என்று என் நினைவில் சேகரமாகியுள்ள ஜல்லிக் கட்டு வேறு. அசலான ஜல்லிக்கட்டு இந்த வாடி வாசல் நாவலில் இருக்கிறது…
ஜல்லிக்கட்டைப் பற்றியே அதிகப் பக்கங்களுக்கு விவரணைகள் உள்ள இந்நாவலில் ஆசிரியர் போகிற போக்கில் மனித மனங்களின் இயங்கு திசையை,அதன் நிறங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்