Your cart is empty.
None
மோ-யானின் 'மாற்றம்' இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியின் நாவல்
மிகச்சிறிய அளவிலான புத்தகம். அதே சமயம் நீண்ட வரலாற்றைப் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் ஒன்று. கிட்டத்திட்ட ஆசிரியரின் சுயசரிதைதான், ஆனால் நாவல் வடிவத்தில் தந்திருக்கிறார்.
கதையின் ஆசிரியர்தான் நாவலிலும் கதை சொல்லி. மோனோலாக் வகையில் அமைந்த கதை. வசனங்களே கிடையாது.
கதையின் ஆசிரியர் பள்ளியிலிருந்து நீக்கப்படுவதில் இருந்து துவங்குகிறார், அவரது வகுப்புத் தோழிகள், தோழர்கள் ஆசிரியர்கள் என சொல்லத் துவங்கி சராசரிச் சிறுவன் ஒருவனின் கார் பொம்மை ஆசைபோல ஒரு டிரக் பற்றிய பிலாக்கணங்களுடன் அத்தியாயங்களைத் தொடருகிறார். மெல்ல ராணுவத்தில் சேருகிறார். கணக்குத் திறன் எழுதும் மொழியறிவால் இராணுவத்தில் வேறு சில பணிகளுக்கு நகர்கிறார். பள்ளி நண்பன் ஒருவனைச் சந்திக்கிறார். அவனுக்குச் சில உதவிகள் செய்திருக்கிறார். ஒருநாள் அவன் பெரிய ஒரு கோடீஸ்வரனாக அவர் முன் நின்று தனது தரப்பின் கதையினைச் சொல்லுகிறான். இவர்களது உரையாடலோடு புத்தகம் முடிகிறது. கதை என்று தனித்துவமாக ஒன்றுமே கிடையாது.
மோனோலாக் வகையில் ஒரு கதையினை முழுக்க முழுக்க நான் வாசிப்பதும் இதுவே முதல் முறை என்பதால் மிக வித்தியாசமான வாசிப்பனுபவமாக அமைந்தது.