Your cart is empty.
லதா அருணாச்சலம்
பிறப்பு: None
கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம் ஆங்கில முதுகலையையும் ஆசிரியப் பட்டப் படிப்பையும் முடித்தவர். பதினான்கு வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் ஆசிரியராகப் பணி புரிந்த லதா அருணாச்சலம், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'உடலாடும் நதி'. நைஜீரிய எழுத்தாளர் அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimson Blossoms என்னும் நாவலைத் 'தீக்கொன்றை மலரும் பருவம்' எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனந்த விகடன் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் விருதையும் 'வாசக சாலை' இலக்கிய அமைப்பின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் விருதையும் இந்நூல் பெற்றுள்ளது.
