Your cart is empty.
தாண்டவராயன் கதை
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின் கணவனை அவளுடைய கதைகளில் ஒன்றாகக் கண்டுபிடிக்கிறார் கிரிஃபித் அப் ஒவைன். • பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க ‘தாண்டவராயன் கதை’ இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம். (ராஜன் குறை, ‘குமுதம் தீராநதி’) • ‘தாண்டவராயன் கதை’ ஒரு அசாதாரணமான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. (கா. மோகன்ராம், ‘கல்குதிரை’) •
பா. வெங்கடேசன்
பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கியவர்; மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம்வரை அங்கேயே வளர்ந்தவர். மனைவி, இரண்டு மகன்களுடன் பணி நிமித்தமாக இப்போது ஒசூர்வாசி. வாகனங்களுக்கான பிளாஸ்டிக் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரபல தனியார் தொழில் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் மேலாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், சிறு புதினங்கள், புதினங்கள் படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை பதிப்பிக்கப்பட்டவையும் படாதவையும் படவிருப்பவையுமாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்புகள். புனைவிலக்கியத்தில் சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ் திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.