Your cart is empty.
ராணியுடன் ஒரு தேநீர் விருந்து
-இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின் கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட்டெடுப்பதன் மூலம் தங்கள் பண்பாட்டின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்.
வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற இலக்கியப் பரிமாற்றப் பயிலரங்கில் காலச்சுவடு சார்பில் கலந்துகொண்ட அரவிந்தன், அப்பயிலரங்கின் தொடர்ச்சியாக இக்கதைகளை ஆங்கிலம் வழியே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வேல்ஸ் மக்களின் பண்பாடு, மொழிச் சிக்கல்கள், நிலப்பரப்பு, தட்பவெப்ப நிலை என அவர்களது வாழ்நிலையைச் செறிவாகவும் படைப்பூக்கத்துடனும் முன்வைக்கும் கதைகள் இவை.