Your cart is empty.
கருப்பட்டி
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக் கட்டுக்குள் வைக்கும் மாயக் கயிறுகளை அறுப்பதே இப்படைப்புகளின் நோக்கம். இவ்வகையில் ஆன்மிக உணர்வில் சஞ்சரித்து அதன் விளைவுகளை நேர்நின்று கலையுணர்வாய்ப் பிரதிபலிக்கிறார் மலர்வதி. ஒரு மண்ணின் மாந்தர்களை அதே வட்டார மொழியின் மணத்தோடு வரிசைப்படுத்துகின்ற எளிய கதைகள். - களந்தை பீர்முகம்மது
மலர்வதி
மலர்வதி இயற்பெயர் மேரி புளோரா. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த வெள்ளிகோடு பகுதியில் வசித்து வருகிறார். ஒன்பதாம் வகுப்பின் பாதியில் படிப்பு பறிபோனது. அதன்பின் தொடர்ந்த வாசிப்புகளும், பல்வேறு வாழ்க்கை அனுபவங்களுமே இலக்கியத்துக்கான காரணங்களாகின. தொடக்ககால எழுத்துகள் நாடகங்களாக வெளிவந்தன. அதன்பின் சமயம்சார்ந்த கட்டுரைகள், தவக்கால வழிபாட்டு நூல்கள் ஆகியன மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழியாக பி.லிட் தமிழ் கற்றார். 2008ஆம் ஆண்டு வெளிவந்த ‘காத்திருந்த கருப்பாயி’ நாவல் முதல் படைப்பு. அதன்பின் 2012ஆம் ஆண்டு வெளியான ‘தூப்புக்காரி’ நாவல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதைப் பெற்றது. ‘காட்டுக்குட்டி’ நாவல் 2015இல் வெளிவந்தது. 2015ஆம் ஆண்டு முதல், குமுதம் தீராநதியில் சூழல் சார்ந்த கட்டுரைகள், எழுத்து ஆளுமைகளின் நேர்காணல்கள் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். இத்தொகுப்பு முதல் சிறுகதைத் தொகுப்பு. அம்மா: எம். ரோணிக்கம், அப்பா: ஜி. எலியாஸ். அண்ணன்: E. ஸ்டிபன், அக்கா: E. மேரி லதா. தொடர்பு எண்: 9443514463 மின்னஞ்சல்: malarvathi26@gmail.com