Your cart is empty.
அழைப்பு
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார். ‘மோனத்தவம்’ என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் மொழி, உள்ளடக்கம், உத்தி, பார்வை ஆகியவை சார்ந்து சு.ரா.வின் படைப்பாளுமையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.











