Your cart is empty.
1945இல் இப்படியெல்லாம் இருந்தது. . .
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தன்னுடைய படைப்பு மூலம் காலத்தைப் பின்னுக்குத் … மேலும்
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தன்னுடைய படைப்பு மூலம் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எழுதிய கதைகளும் இன்று எழுதும் கதைகளும் அவை எழுதப்பட்ட காலத்தை உதறிச் சமகாலத்தவையாகவே நிலைபெறுகின்றன. வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில் அசோகமித்திரன் எழுதிய இருபத்தி இரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789380240589
SIZE : 13.9 X 0.8 X 21.0 cm
WEIGHT : 161.0 grams
A collection of 22 new short stories by Ashokamithran.














