Your cart is empty.
ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு) (இ-புத்தகம்)
நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன், கவிதைகளைவிட அதிக அளவில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள் அவர் கவிதைகளின் அழகியலும் அரசியலும் எந்த விதமான பின்னணியிலிருந்து வருகின்றன … மேலும்
நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன், கவிதைகளைவிட அதிக அளவில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள் அவர் கவிதைகளின் அழகியலும் அரசியலும் எந்த விதமான பின்னணியிலிருந்து வருகின்றன என்று காட்டுவதோடு அவரது நவீனத்தை இயக்கும் மரபு மனத்தையும் வெளிப்படுத்துகின்றன. பெருமளவு கவிதை பற்றியே எழுதியிருக்கும் ஞானக்கூத்தன், செய்யுளியல், அவர் பார்வையில் சங்க காலச் சமூகம், பாரதியாரின் வாழ்க்கை, கவிதை, புதுக்கவிதை வரலாறு, சமகாலக் கவிஞர்கள், இலக்கிய அரசியல் போன்ற விஷயங்களில் குறிப்பாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள பல இலக்கண, இலக்கிய நூல்களை ஞானக்கூத்தன் விரிவாகப் படித்திருக்கிறார். குறிப்பாகத் தமிழிலும் வடமொழியிலும் தொல்காப்பியர், அபிநவகுப்தர், ஆனந்தவர்தனர் முதலிய ஆசிரியர்களின் வரையறைகளையும் கருத்தாக்கங்களையும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கவிதைகளுக்குப் பொருத்திக் காட்டுகிறார். ஞானக்கூத்தன் படைப்புகளில் தரம் பார்ப்பதுபோல் அவற்றை மதிப்பீடுகளின் அடிப்படையிலும் விமர்சிக்கிறார். இந்த மதிப்பீடுகள் வடமொழி நீதி நூல்கள், சாஸ்திரங்களிலிருந்து வருகின்றன. மது அருந்துதல், புலால் உண்ணுதல், காதல், கலப்புத் திருமணம், காமம், வன்முறை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, பேச்சுத் தமிழ், வட்டார வழக்கு போன்றவை படைப்புகளில் இடம்பெறும்போது அவை ஏற்பியல் லட்சணங்களுக்கு விரோதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
ISBN : 9789355231239
PAGES : 2
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஞானக்கூத்தன் கவிதைகள் (இ-புத்தகம்)
-ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் ம மேலும்





