Your cart is empty.
இது நம் சினிமா (இ-புத்தகம்)
தமிழ்த் திரையின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி தியடோர் பாஸ்கரன். தமிழ்த் திரையின் வரலாறு, அழகியல், உள்ளடக்கம் போன்ற பல்வேறு பரிமாணங்கள் பற்றி கடந்த ஐம்பது … மேலும்
தமிழ்த் திரையின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி தியடோர் பாஸ்கரன். தமிழ்த் திரையின் வரலாறு, அழகியல், உள்ளடக்கம் போன்ற பல்வேறு பரிமாணங்கள் பற்றி கடந்த ஐம்பது ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் பெருந்தொகுப்பு இந்நூல். தமிழ்த் திரை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்களை வரைபடமாக்கும் இக்கட்டுரைகள், நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. திரைப்படத் தொழிற்சங்கம், தமிழ்த் திரையில் காட்டுயிர், தமிழ்த் திரையும் தணிக்கையும் உள்ளிட்ட முன்னுதாரணம் இல்லாத கட்டுரைகள், தமிழ்த் திரையின் ஆய்வு எல்லையை விரிக்கின்றன. தமிழ்த் திரையின் தோற்றம், வளர்ச்சி, போக்கு பற்றி விரிந்த பார்வையும் ஆழ்ந்த நுட்பமும் கொண்ட இந்தக் கட்டுரைகள், பல்வேறு கேள்விகளின் ஊடாகத் தமிழ்த் திரை பற்றிய ஆரோக்கியமான கரிசனத்தை உருவாக்க முயல்கின்றன. தமிழ்த் திரை அடைந்திருக்கும் நற்பேறுகளில் ஒன்று இத்தொகுப்பு.
ISBN : 9789355234049
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இது நம் சினிமா (தமிழ்த்திரை சார்ந்த கட்டுரைகள்)
தமிழ்த் திரையின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி தியடோர் பாஸ்கரன்.
தமிழ்த் மேலும்
மழைக்காலமும் குயிலோசையும் (இ-புத்தகம்)
-தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் மேலும்







