Your cart is empty.


நகரப் பாடகன்
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் … மேலும்
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்றது அதன்மீதான அலசல். இந்தப் பகுப்பாய்வைக் கனவுகளின் வழியாகக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கனவே நடைமுறையாகிறது. அந்தக் கணத்தில் விசித்திரமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விளைவுகள்தாம் அவர் கதைகள். இந்தக் கதைகளில் குடும்பத்தின் வன்முறையும் காமத்தின் வீச்சும் துரோகத்தின் சமாளிப்பும் வன்மக் கொலையின் நிர்த்தாட்சண்யமும் பேசப்படுகின்றன. சமூக நியதிகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் உடைத்து வார்க்கப்படுகின்றன. மனிதர்கள், சன்மார்க்கர்களா துன்மார்க்கர்களா? இரண்டும் இல்லை; இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்; நம்மைப் போன்றவர்கள். அன்றாட ஒப்பனையிலிருக்கும் நமது அறியப்படாத இன்னொரு முகத்தைக் கொண்டிருப்பவர்கள் என்கின்றன குமாரநந்தன் கதைகள்.
ISBN : 9789386820556
SIZE : 14.0 X 1.3 X 21.9 cm
WEIGHT : 202.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒளிரும் பச்சைக் கண்கள்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
தலைப்பில்லாதவை
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான 'மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க ந மேலும்
ஆகாயத் தாமரை
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரி மேலும்
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைக மேலும்
இல்லாத ஒன்று
எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 மேலும்
அழைப்பு
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார மேலும்
வனம் திரும்புதல்
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங மேலும்
ஒளிவிலகல்
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிர மேலும்
என் வீட்டின் வரைபடம்
மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, மேலும்
கனவுப் புத்தகம்
தீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள மேலும்
பிறகொரு இரவு
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவரு மேலும்
முதல் தனிமை
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வ மேலும்
வீடென்ப . . .
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெ மேலும்
வன்னியாச்சி
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக மு மேலும்
நகரப் பாடகன்
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில மேலும்