Your cart is empty.


சிறகுகள் முறியும்
மேலும்
தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக விளங்கும் அம்பையின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. அம்பையின் இன்றுவரையிலுமான கதைகளில் காணப்படும் படைப்பின் வீரியம் அவரது முதல் தொகுப்பிலேயே முழுமையாக வெளிப்பட்டிருப்பதை இந்தக் கதைகளில் காணலாம். தமிழ்ப் படைப்புலகில் புதிய குரலாக ஒலித்த இந்தக் கதைகள் பின்னாளில் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத குரலாக உருப்பெற்ற ஓர் இலக்கிய ஆளுமையின் செறிவான பயணத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.
அனுபவங்களும் கருத்து நிலை சார்ந்த அறிவார்த்தமான கேள்விகளும் கற்பனையின் துணையுடன் அற்புதமான படைப்புகளாக உருப்பெறும் ரசவாதத்தை இந்தக் கதைகளில் உணரலாம். புதிய பேசுபொருள்கள், பலவிதமான கோலங்களைக் காட்டும் சிறுகதை வடிவங்கள், சரளமாகக் கதைகூறும் உத்திகள், உயிரோட்டமுள்ள மொழிநடை, உரையாடல்களையும் மன உணர்வுகளையும் துல்லியமாகத் தரும் திறன் ஆகிய வலிமைகளைக் கொண்ட தொகுப்பு இது.
ISBN : 9788187477600
SIZE : 13.8 X 0.7 X 21.5 cm
WEIGHT : 191.0 grams