Your cart is empty.


சிவப்புத் தகரக் கூரை
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க … மேலும்
வகைமைகள்: விருதுபெற்ற எழுத்தாளர் | இந்திய கிளாசிக் நாவல் | நவீன இந்திய கிளாசிக் நாவல் |
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை. சிக்கலான இக்காலகட்டத்தில் அச்சிறுமி எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், அவளது உடலில் ஏற்படும் கிளர்ச்சியும் குதூகலமுமான மாற்றங்கள், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் புதிரான உலகம், எப்போதும் புகைமூட்டமானதாகவே வெளிப்படும் உறவுகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என யாவற்றையும் எளிய மொழியில் சித்தரிக்கிறது இந் நாவல்.
நிர்மல் வர்மா
நிர்மல் வர்மா (1929-2005) சிம்லாவில் பிறந்து வளர்ந்து தில்லியில் வாழ்ந்தவர். வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி இலக்கியத்தின் நயி கஹானி (புதிய சிறுகதை) மரபின் முன்னோடி. நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரான இவர் பன்முக ஆளுமை மிக்கவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பயணக் கட்டுரை, மொழியாக்கம் என அனைத்துத் துறைகளிலும் அழுத்தமான முத்திரை பதித்தவர். செக்கோஸ்லாவாக்கியாவின் பிராக் நகரில் இலக்கியப் பணிக்காகப் பத்தாண்டுகள் தங்கியிருந்தார். போபாலில் உள்ள நிராலா படைப்பிலக்கிய மையத்திற்கும் சிம்லாவில் உள்ள யஷ்பால் படைப்பிலக்கிய மையத் திற்கும் தலைவராகப் பணியாற்றினார். சாகித்திய அகாதெமி பரிசையும் (1985), ஞானபீடப் பரிசையும் (1997), பத்மபூஷன் விருதையும் (2002) பெற்றார். கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, சமூக அக்கறை எனப் பல்வேறு தளங்கள் சார்ந்து அவரது கருத்துக்கள், ஐம்பதாண்டுகால இந்தி அறிவுத் தளத்தில் பெரிதும் மதிக்கப்பட்டிருந்தன.
ISBN : 9789382033097
SIZE : 14.0 X 1.2 X 21.4 cm
WEIGHT : 313.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழு மேலும்
தலைமுறைகள்
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாப மேலும்
தோட்டியின் மகன்
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட மேலும்
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளி மேலும்
சென்றுபோன நாட்கள்
பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவ மேலும்
கோடைகாலக் குறிப்புகள்
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத மேலும்
மோகமுள்
பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது மேலும்
பால்யகால சகி
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தல மேலும்
ஜே.ஜே: சில குறிப்புகள்
அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட எ மேலும்
வெண்ணிறக்கோட்டை
ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர் மேலும்
சாலப்பரிந்து
நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண் மேலும்
மதில்கள்
வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலயோலப் பரம்ப மேலும்
இதுதான் என்பெயர்
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக் மேலும்