Your cart is empty.
 
                
                    
                         
                
            
        
    தலைமுறைகள்
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கிளாசிக் நாவல் | தமிழ் கிளாசிக் நாவல் |
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்.
நீல. பத்மநாபன்
நீல. பத்மநாபன் (பி. 1938) பள்ளி நாட்களில் தொடங்கி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் நீல. பத்மநாபன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் மின்பொறியியலிலும் பட்டங்கள் பெற்று, கேரள மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். ‘பள்ளிகொண்டபுரம்’, ‘தலைமுறைகள்’, ‘உறவுகள்’, ‘தேரோடும் வீதி’, ‘இலை உதிர் காலம்’ உள்பட இருபது நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கவிதைத் தொகுப்புகள், பதினொரு கட்டுரைத் தொகுப்புகள், மொழியாக்கங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘இலை உதிர் காலம்’ நாவலுக்காகவும் (2007), ‘ஐயப்பப் பணிக்கர் கவிதைகள்’ மொழியாக்க நூலுக்காகவும் (2003) சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்றுள்ளார். மேலும் ராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது (1987), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது (1987), பாஷா பாரதி பரிசு (2006), இலக்கியச் சிந்தனைப் பரிசு (2013) உட்படப் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மன், ரஷிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தையும் வாழ்க்கையையும் பற்றிய குறும் படத்தை சாகித்திய அக்காதெமி வெளியிட்டுள்ளது.
ISBN : 9789382033196
SIZE : 13.8 X 1.6 X 20.9 cm
WEIGHT : 434.0 grams
This novel describes the life of a chetty family of Eraniel in Kanyaumari district. The story moves through three generations. The lives, customs, life style, festivals, etc of the family are well described in detail without spoiling the flow of the story. A magnificent work that place the author among the Tamil’s greatest writers. Published in kalachuvadu Modern Classic series.<\p>
 
										 
									 
		














 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		