Your cart is empty.
அமானுஷ்ய நினைவுகள்
அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் … மேலும்
அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும் அவரிடம் இருந்ததை உறுதிப்படுத்தும் கதைகள். எளிய மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், இயல்பான உணர்வுகள், இவற்றினிடையே நிகழும் ஊடாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வின் ஆதார ஸ்ருதியைத் தொட்டுக் காட்டும் கதைகள். வாழ்க்கை நிகழ்வுகளின் பல்வேறு சாத்தியக்கூறுகளே என் கதைகள் என்று அசோகமித்திரன் கூறியிருக்கிறார். நிகழ்வுகளின் மாறுபட்ட சாத்தியக்கூறுகளினூடே மாறாத வாழ்வின் அடிப்படைகள் குறித்து இக்கதைகள் பேசுகின்றன. அசோகமித்திரனின் தொடக்ககாலக் கதைகள் இளம் எழுத்தாளருக்கான சலுகை கோராமல் தம் பலத்தில் நின்றன. அவருடைய கடைசிக் கதைகளும் அந்திம காலக் கதைகளுக்கான சலுகை எதுவும் தேவைப்படாமல் படைப்பாற்றலோடு நிற்கின்றன. அரவிந்தன்
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789352441013
SIZE : 12.0 X 0.5 X 18.0 cm
WEIGHT : 79.0 grams
Asokamitran’s writing career spans over six decades. These stories are from his last years are as impressive as ever. He remained as and is one of the greatest tamil writers. Writing off Common men, daily routine, through usual emotions and their conflicts asokamitran exposed slivers of life’s origins. He has described his stories as multiple possibilities of simple happenings. His early stories never needed the considerations for a debut, but were valued for their sheer brilliance, his last stories are no different.














