Your cart is empty.


அம்பை கதைகள் -1970-2022
-பல்வேறு கதிகளில் ஓடும் வாழ்க்கையின் லகானிட்ட தருணங்களையும் வெறும் புழுதியாகவே எஞ்சிவிடும் … மேலும்
-பல்வேறு கதிகளில் ஓடும் வாழ்க்கையின் லகானிட்ட தருணங்களையும் வெறும் புழுதியாகவே எஞ்சிவிடும் அனுபவங்களையும் கூறும் கதைகள் இவை. சில கதைகள் பயணங்களால் உருவானவை. சில வேறு வாழ்க்கைப் பரிமாணங்களை எட்ட முயல்பவை. எல்லாக் கதைகளும் நகரங்களிலும் சிற்றூர்களிலும் அமையும் வாழ்க்கையைத் தொட்டுச் செல்பவை. இந்த ஓட்டத்தில் பல்வேறு உணர்வுகளுடன் இணையும் பல பெண்கள், ஆண்கள், சிறுமிகள், சிறுவர்கள். நகர்ப்புறத்தின் குற்ற முடிச்சுகளை அவிழ்க்க முயலும் சிலர். அவரவர்களுக்கான காரணங்களுடன் வாழ்க்கையை வாழவும் முடித்துக்கொள்ளவும் தீர்மானிக்கும் நபர்கள். அவர்களிடையே கிளைக்கும் பலவகைப்பட்ட உறவுகள், அவற்றிலுள்ள காதல், காமம், நேசம், பரிவு, சினம், கொலைவெறி. எல்லாவற்றையும் பிணைத்துக் கட்டும் இசை, அடர்ந்த மரங்களும் புதிர்ப்பாதைகளும் உள்ள அடவி, பல்லுயிர்கள் வசிக்கும் கடல், புராணங்களைக் கூறும் ஆறு, பின்னணி ஒலியாய்த் தொடரும் பறவை ஒலிகள் என்று ஓடும்போதே பாதைகளை வகுத்துக்கொண்டு ஓடும் கதைகள் இவ்விரண்டு தொகுப்புகளிலும் உள்ளன.
ISBN : 9789361100079
SIZE : 14.0 X 5.0 X 21.0 cm
WEIGHT : 1.28 grams