Your cart is empty.
அஸீஸ் பே சம்பவம்
துருக்கிய நகரமொன்றின் மது விடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | உலக கிளாசிக் நாவல் | நவீன உலக கிளாசிக் நாவல் |
துருக்கிய நகரமொன்றின் மது விடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டுமே இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக்குடன் திரிந்த அஸீஸ் பேயை மரியத்தின் மேலுள்ள மாளாக் காதல் தடுமாறச் செய்கிறது. வேலையைத் துறக்கச் செய்கிறது. பெற்றோரை இழக்கச் செய்கிறது. இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை சாகசப் பயணம் செய்ய வைக்கிறது. இருந்தும் மரியம் அவனுடைய காதலை உதாசீனம் செய்கிறாள். அஸீஸ் பே அந்தக் காயத்தை மீறுவதற்காகப் போராடுகிறான். அதில் வாழ்வதற்காக மனிதன் மேற்கொள்ளும் எல்லா நற்செயல்களும் கபடங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து அஸீஸ் பே கற்றுக்கொள்ளும் பாடம்: தான் ஒரு கலைஞன், கலைஞன் மட்டுமே. இந்த உணர்வுதான் மது விடுதிச் சம்பவத்துக்கு அவனை இட்டுச்செல்கிறது. சொல்லப்படும் கதையின் பொருளைச் சார்ந்தல்ல, சொல்லும் முறையைச் சார்ந்தே இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது என்பதற்கான நவீன துருக்கி இலக்கிய உதாரணங்களில் ஒன்று இந்த நெடுங்கதை. அய்ஃபர் டுன்ஷின் படைப்பு இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் வெளியாகிறது.
அய்ஃபர் டுன்ஷ்
அய்ஃபர் டுன்ஷ் (1964) ‘நான் எழுதுகிறேன். ஏனெனில், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒற்றை வாழ்க்கையுடன் நிறைவடைய என்னால் முடியாது. நான் நானாக இருக்கவும் அதே நேரத்தில் பிறராக இருக்கவுமே எழுதுகிறேன்’ என்று குறிப்பிடும் அய்ஃபர் டுன்ஷ், சமகாலத் துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். அடாபஸாரியில் பிறந்தார். இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறையில் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைக்கழக நாட்களிலிருந்தே கலை, இலக்கிய, கலாச்சார இதழ்களில் எழுதத் தொடங்கினார். கும்ஹுரியத் நாளிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற முதல் பரிசு அய்ஃபர் டுன்ஷ்க்கு இலக்கிய மதிப்பை ஏற்படுத்தியது. யாபி க்ரெதி பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இரண்டு நாவல்கள், ஐந்து சிறுகதைகள், இரண்டு வாழ்க்கைக் குறிப்புகள், ஓர் ஆய்வு நூல் – ஆகியவை வெளிவந்துள்ளன. தனது சிறுகதையை அடிப்படையாகக்கொண்ட படத்துக்குத் திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.
ISBN : 9789380240466
SIZE : 15.2 X 0.5 X 22.9 cm
WEIGHT : 153.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்