Your cart is empty.
அவன் ஆனது
சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம், மையப் பிரச்சினை, முடிவு என்பனபோன்ற சம்பிரதாயமான கட்டமைப்பைத் தவிர்க்கிறது. சொல்லப்படும் கதை ஒரு தளத்தில் முன்னகர, சொல்லப்படாத இன்னொரு கதையும் இணைச்சரடாக ஓடுகிறது. வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போதும் புதிதாகவே இருப்பது இதன் வலிமை.
ISBN : 9789355232274
SIZE : 139.0 X 12.0 X 213.0 cm
WEIGHT : 290.0 grams
ஷோபனா நாராயணன்(முகநூலிலிருந்து)
15 Dec 2025
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ - கிளாஸிக் நாவல்
வாசகப் பரிந்துரை
’’தவறவிடக்கூடாத நாவல்”
…சா. கந்தசாமியின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ் என என்னால் இந்தப் புத்தகத்தை உறுதியாக குறிப்பிட இயலும்…
1981 இல் எழுதியிருக்கிறார். 44 வருடங்களுக்கு பிறகும் கருக்கு குலையாத புத்தகம் எனலாம்.
…இதில் என்ன சிறப்பு என்பதுதான் இந்த புத்தகத்தின் உச்சம். கதையே கிடையாது. அதேபோல கதாபாத்திரங்களும் நேரடியாக கிடையாது. எல்லாமே சிவ சண்முகம் என்னும் முதன்மைப்பாத்திரத்தின் மனக்குரல். சிவ சண்முகம் கதை சொல்லும்போதுதான் அந்த களங்களை மாற்றியபடியே வருவான்…
நாவல் விரும்பிகள், உளவியல் கதை விரும்பிகள், நாவல் எழுத விரும்புவோர் , இலக்கியவாசகர்கள் , தவறவிடக்கூடாத நூல் என்பேன்…
நன்றி: ஷோபனா நாராயணன்(முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:













