Your cart is empty.
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு … மேலும்
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன், துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்தக் கதைகள் அசோகமித்திரன் கதையுலகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9788189359096
SIZE : 13.8 X 0.6 X 21.4 cm
WEIGHT : 152.0 grams
Ashokamitran’s 17 short stories.














