Your cart is empty.
பஷீரின் 'எடியே'
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் … மேலும்
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம் கொண்டிருக்கின்றன. படைப்பின் மூலம் அறியப்படும் பஷீரை விடவும் படைப்பை மீறி அறியப்படும் பஷீர் பேரபிமானத்துக்குரியவராக மாறியிருக்கிறார். பஷீர் படைப்புகளுக்கு நிகராகவே பஷீர் என்ற ஆளுமையைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஃபாபி பஷீரின் நினைவோடை நூலும் அதில் ஒன்று. ஆனால் முற்றிலும் மாறுபட்டது. இலக்கிய ஆளுமையாகவும் பண்பாட்டு நாயகராகவும் அறியப்பட்ட பஷீரை அன்பான கணவராகவும் வாஞ்சை மிகுந்த தந்தையாகவும் நம்பகமான தோழராகவும் எளியவர்களின் வரலாற்றாளனாகவும் உன்மத்தம் பீறிடும் படைப்பாளியாகவும் ஃபாபி இந்த நினைவுக் குறிப்புகளில் முன்னிறுத்துகிறார். ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகள் அவருடன் இணைந்து வாழ்ந்த ஃபாபி மகத்தான இந்த இலக்கியவாதியின் அகத்தையும் புறத்தையும் வெளிப்படுத்துகிறார். உண்மையின் தீவிரம் மிளிரும் இந்த வெளிப்படுத்தல் வைக்கம் முகம்மது பஷீரை இன்னும் நெருக்கமானவராகவும் இன்னும் மேலானவராகவும் துலக்கப்படுத்துகிறது. படைப்புக்காக வாழ்ந்த எழுத்துக் கலைஞரின் வாழ்வையே மாபெரும் படைப்பாகக் காண வழி அமைக்கிறது. This is the autobiography of Fabi Basheer, widow of vaikom mohammed basheer. Basheer is a pride of every malayali. His fame has only multiplied after his death. His readers keep him close to their heart as much as his works. Numerous books have been written about Basheer the personality and his works. Fabi Basheer’s memoir is one of them, but stands apart from all of those. The Literary and cultural hero Basheer is introduced to us as a loving husband, father, earnest friend, historian of the working class and an artist bobbling with life. Fabi tells us much from both the private and public moments of her shared life with Basheer of about four decades. The intensity of truth in this portrayal makes us feel more intimate with Basheer. This memoir reveals to us the life of a great man of literature is by itself one of the greatest literary works ever. Taha Madayi wrote the book as told by Fabi basheer, and Sukumaran renowned poet writer has translated it into Tamil.
ஃபாபி பஷீர்
ஃபாபி பஷீர் (1938 - 2015) அரீக்கோடு கோயக்குட்டி மாஸ்டர், கதீஜா தம்பதியரின் மகள். வைக்கம் முகம்மது பஷீரின் மனைவி. ஒரு மகளும் (ஷாஹினா) மகனும் (அனீஸ்) இருக்கிறார்கள். மலையாளத்தின் இலக்கியப் பயண மையங்களில் ஒன்றான பஷீரின் கோழிக்கோடு பேப்பூரிலுள்ள வைலாலில் வீட்டில் வாழ்ந்தார். மறைந்த ஆண்டு 2015. தாஹா மாடாயி எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆளுமைகளின் வரலாறுகளை எழுதிய வரலாற்றாளர். மலையாள நடிகர் மாமுக் கோயா, சூழலியலாளர் பொக்கூடன், கவிஞர் குஞ்ஞுண்ணி ஆகியவர்களது வாழ்க்கைக் கதைகளை எழுதியவர். கோழிக்கோட்டில் வசிக்கிறார்.
ISBN : 9789384641184
SIZE : 13.8 X 0.6 X 21.4 cm
WEIGHT : 132.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பஷீரின் 'எடியே'
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த பு மேலும்
ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. க மேலும்