Your cart is empty.



இறுதிப் பூ
₹45.50
நவீனத் மேலும்
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது.
உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது; வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிறது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் உணர்த்துகின்றன.
வாசக மனத்தில் கவிதைகளை அழுத்தமாகப் பதியவைக்கும் வகையிலான சிற்றோடையின் நீரோட்டம் போன்ற மொழிநடை உமா மகேஸ்வரியின் தனிச் சிறப்பு.
ISBN : d9788189945428
SIZE : 13.5 X 0.6 X 21.0 cm
WEIGHT : 75.0 grams