Your cart is empty.
இதுதான் என்பெயர்
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | மொழிபெயர்ப்பு நாவல் |
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’. Gandhi's murder is independent India's first political assassination. In a sense, Its also the first call to religious intolerance of the nation. This fiction starts with Gandhi's death and delves into two person's – Gandhi's Gotse and Gotse's Gandhi - psyche before and after that death. This psychological interrogation makes sarkariya's Novel. Sarkariya who announces “The political growth stages of my mind are naturally expressed in my writings”, expresses his politics in literature on “This is my Name”. Translated into tamil by Poet and Translator Sukumaran, Well-known for his translations of Marquez and Bashir among other works.
சக்கரியா
சக்கரியா (பி. 1945) கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் உருளிக்குன்னத்தில் ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். உருளிக்குன்னம், பாலா, மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். பெங்களூர், காஞ்ஞிரப்பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர். ‘ஏஷியாநெட்’ மலையாளத் தொலைக்காட்சியின் நிறுவன ஆலோசகர். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். சொந்தப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் உட்பட இருபத்துமூன்று நூல்களுக்கு ஆசிரியர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லா இலக்கியப் பிரிவுகளிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். அருந்ததி ராயின் ‘தி எண்ட் ஆஃப் இமாஜினேஷன்’ கட்டுரையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
ISBN : 9789352440207
SIZE : 12.6 X 0.4 X 22.2 cm
WEIGHT : 85.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
என்னை மாற்று
-ஸிந்தஸிஸ் எனும் செயற்கைப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை
உண்டு வாழும் மேலும்
ஒரு பெண்மணியின் கதை
-அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர்
1986 ஆம் மேலும்